BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
டெல்லியில் 9 மணி நேர தர்ணா: வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்ட ராகுல் காந்தி விடுவிப்பு
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோரை காவல்துறையினர் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றினர். காவல்துறை வேனில் அழைத்துச் செல்லப்பட்ட ராகுல் காந்தி பின்னர் விடுவிக்கப்பட்டார்.
காணொளி, டெல்லி: தர்ணா செய்த ராகுல், பிரியங்காவை காவல்துறை அப்புறப்படுத்திய காட்சி, கால அளவு 0,42
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லி அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை காவல்துறையினர் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றினர்.
ராகுல், பிரியங்கா வலுக்கட்டாயமாக அகற்றம் - டெல்லியில் நடந்தது என்ன? 15 புகைப்படங்கள்
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடந்த போராட்டத்தில் காலை முதல் இரவு வரை என்ன நடந்தது என்பதை விளக்கும் புகைப்படத்தொகுப்பு.
இடைத்தேர்தலில் மதுராந்தகம் - 85.99% , தாராபுரம் - 80.31% வாக்குகள் பதிவு
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் புற்றுநோய் அதிகரிப்பு: நீங்கள் புறக்கணிக்க கூடாத அறிகுறிகள் என்ன? 7 முக்கிய விஷயங்கள்
தமிழ்நாட்டில் புற்றுநோய் ஆண்டுதோறும் அதிகரித்துவருவதைக் காட்டினாலும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் பரிசோதனை செய்துகொள்வதை எடுத்துக் காட்டுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். புற்றுநோய் குறித்து புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள் என்ன? அதற்கான பரிசோதனைகள் என்ன என்பதை மருத்துவர்களிடம் கேட்டோம்.
எஸ்ஐஆர்: படிவம் 6-ல் மாற்றம் செய்தது யார்? அதனால் யாருக்கு சிக்கல்? படிவங்கள் 6, 7 மற்றும் 8-ன் முக்கியத்துவம்
ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையில் கூடுதல் தேவைகளைச் சேர்த்தது யார், படிவம் 6-ல் மாற்றங்களைச் செய்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் யாருக்கு உள்ளது போன்ற இரண்டு தனித்தனி கேள்விகள் உள்ளன. படிவங்கள் 6, 7 மற்றும் 8-ன் முக்கியத்துவம் என்ன?
அமெரிக்கா: முன்னாள் ராணுவ மேஜருக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற ஆணை - எதற்காக?
அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஒருவருக்குத் துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று பென்டகன் அறிவித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தில் இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும்.
கோவில் பூட்டை உடைத்து தலித் மக்களை உள்ளே அனுமதித்த காவல்துறை - கள்ளக்குறிச்சி அருகே என்ன நடந்தது?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குரால் கிராமத்தில், பட்டியலின மக்களைப் பெருமாள் கோயிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்ததாக இடைநிலை ஜாதியினர் 16 பேர் மீது கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டியலினத்தைச் சேர்ந்த ராமசாமி அளித்த புகாரின் அடிப்படையில்
பாஜக ஆதரவு குடும்பத்தில் பிறந்து இளைஞர், இடதுசாரி இயக்கத்தின் முகமாக மாறிய நேஹா போரா
சிபிஐ எம்எல் (லிபரேஷன்) கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தேசியத் தலைவரான நேஹா போரா, ஜார்க்கண்ட் பொதுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் பங்கேற்க ராஞ்சிக்குச் சென்றபோது கவனம் பெற்றார்.
சௌதிக்கு படைகளை அனுப்பும் பாகிஸ்தான், துருக்கி - மெக்கா ஒப்பந்தத்தில் என்ன நடக்கிறது?
ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நோக்கில், மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் செளதி அரேபியாவில் தங்களது படைகளை விரைவாக நிலைநிறுத்த துருக்கி, பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா ஒப்புக் கொண்டுள்ளன. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
'விதைப்பையில் மகன் அடித்ததால் ஒரு வாரமாக குறையாத வலி... இறுதியில் இதுவே தந்தை உயிரை காப்பாற்றியதா?'
பென் லிட்ஜி தனது மகனுடன் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது விதைப்பையில் அடி பட்டது. ஆனால் அந்தச் சம்பவமே அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்.
இயேசுவின் உயிர்த்தெழுதலை முதலில் கண்டதாக கூறப்படும் பெண் யார்? பைபிளின் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தின் கதை
மேரி மக்தலேனா : பாவம், ஜெபம், அன்பு ('Mary Magdalene: Sin. Pray. Love') கண்காட்சி, ஃபிராங்க்ஃபர்ட்டில் உள்ள ஸ்டெடெல் அருங்காட்சியகத்தில் 2026 செப்டம்பர் 17 முதல் 2027 ஜனவரி 17 வரை நடைபெறுகிறது.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
இடைத்தேர்தல்: மதுராந்தகம் தொகுதியில் மக்களின் மனநிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு
மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல். ஆனால், அதற்கான எந்தவித பரபரப்பும் இல்லாமல் தங்களின் அன்றாட பணிகளில் தொகுதி மக்கள் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. மதுராந்தகம் தொகுதியில் மக்களின் மனநிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு
உங்கள் வீட்டில் சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் மானியம் பெறுவது எப்படி? செலவு, வங்கிக்கடன், பராமரிப்பு உள்பட முழு விவரம்
தமிழ்நாட்டில் பருவமழைக் காலத்திலும் வெயில் இன்னும் சுட்டெரிக்கிறது. இந்த வெயிலை பயன்படுத்தி சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம், மின் கட்டணத்தை பெருமளவில் குறைக்க முடியுமென்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன.
அரசு மாணவர் விடுதியில் மாட்டிறைச்சி கோரிக்கை: அமைச்சர் வன்னிஅரசு பேச்சால் சர்ச்சை
தமிழகத்தில் சமூகநீதித்துறையின் கீழ் செயல்படும் அரசு மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்க வேண்டுமென்ற மாணவர்களின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கூறியது சர்ச்சையாகியுள்ளது. என்ன நடக்கிறது?
பாலே இல்லாமல் தயாராகும் செயற்கை பனீரை கண்டறிவது எப்படி? 5 முக்கிய விஷயங்கள்
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பால் சார்ந்த பொருட்கள் எதுவும் இல்லாமல் தயாரிக்கப்படும் செயற்கை பொருட்களுக்கு (analogue products) “பனீர்” என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
26 வயது ஆண் உடலில் கருப்பை: குழந்தையின்மையால் மருத்துவரை சந்தித்த போது தெரியவந்த அதிர்ச்சி
டெல்லியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பிரச்னைக்காக மருத்துவரை அணுகியுள்ளார். அவரைப் பரிசோதித்தபோது, அவரது உடலுக்குள் கருப்பை மற்றும் கருமுட்டைக் குழாய்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
திருவள்ளூர் கழிவுநீர் கூவத்தில் கலப்பது செம்பரம்பாக்கம் ஏரியை எப்படி பாதிக்கக்கூடும்?
திருவள்ளூர் நகராட்சி தனது கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் கூவம் ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது என்று தமிழக அரசின் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நீர் செம்பரம்பாக்கம் ஏரியை வந்தடைவதால் சென்னைவாசிகளின் குடிநீர் பாதிக்கப்படக் கூடும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
'சோவியத்' விமானத்தை எல்லை தாண்டி ஆப்கன் வீரர் ஓட்டி வந்ததால் பாகிஸ்தான் சந்தித்த புதிய சவால்
1979, மார்ச் 23 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் சிறப்புப் பகுப்பாய்வு அறிக்கை, சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானை வந்தடைவதற்கு முன்பே ஆப்கானிய ராணுவத்தில் தொடர்ச்சியான கிளர்ச்சிகள் தொடங்கியிருந்தன என்பதைக் காட்டுகிறது.
'தமிழ் ஈழப்பெண்' என்று கூறியதற்காக எதிர்ப்பை சந்திக்கும் நடிகை - யார் இவர்?
"நான் தமிழ் பெண். என் குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது. என் கலாசாரம் தமிழ். என் நாடு கனடா. என் வேர்கள் இலங்கையில் இருக்கின்றன." கனடா நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் கூறிய இந்த வார்த்தைகள் சமூக வலைதளங்கள் விவாதப்பொருளாகியுள்ளன.
யானைகள் சில தாவரங்கள் மூலம் தமக்குத் தாமே மருத்துவம் செய்யும் - ஆய்வில் புதிய தகவல்
கென்யாவின் மவுண்ட் எல்கான் பகுதியில் வாழும் ஆப்பிரிக்க யானைகள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ள 35-க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களைப் பயன்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த திமிங்கலத்திற்கு ஒரு கப்பலையே கவிழ்க்கும் ஆற்றலை தரும் 'மர்ம உறுப்பு'
'மொபி டிக்' நாவலுக்கு உத்வேகமாக அமைந்த கப்பல் விபத்தில் உயிர் தப்பிய ஒருவருக்கு, திமிங்கலம் தன்னை விடப் பல மடங்கு பெரிய கப்பலை எவ்வாறு அழிக்க முடியும் என்பது குறித்து ஒரு கோட்பாடு இருந்தது. 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அது உண்மையாக நிரூபிக்கப்பட்டு
ஒரே இடத்தில் 23 ஆயிரம் பேரை கழுவேற்றி ஒட்டோமான் படையை விரட்டிய நிஜ 'டிராகுலா' கதை
இலக்கியக் கதாபாத்திரமான டிராகுலாவிற்கு அடிப்படையாக இருந்த, 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வலாக்கியா இளவரசர் 'விளாட் தி இம்பேலர்', ஒட்டோமான் படையெடுப்புகளுக்கு எதிராகக் கொடூரமான 'கழுவேற்றம்' மற்றும் போர்த்தந்திரங்களைக் கையாண்டு பேரழிவை ஏற்படுத்தியதால் ஒருபுறம் இரத்தவெறி பிடித்த கொடுங்கோலனாகவும், மறுபுறம் ருமேனியாவின் தேசிய நாயகனாகவும் வரலாற்றில் நினைவு கூரப்படுகிறார்.
சிஎஸ்கே புதிய பயிற்சியாளர் ஜாகீர் கானுக்கு தோனியுடனான நட்பு எவ்வாறு உதவும்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜஹீர் கான் நியமிக்கப்பட்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு முதல் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுவந்த ஸ்டீஃபன் ஃபிளெமிங் விலகியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































