ஆஸ்திரேலியாவில் சக ஊழியருக்கு படைத்த உணவில் நத்தை விஷத்தை கலந்ததாக பெண் மீது குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டிஃபானி டர்ன்புல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
ஆஸ்திரேலியாவில், சக ஊழியருக்குப் பரிமாறிய உணவில் நத்தை விஷத்தை கலந்து கொடுத்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியா மாகாண காவல்துறை இதுகுறித்துக் கூறியதாவது, பாதிக்கப்பட்டதாகக் கூறும் சக ஊழியர் பிப்ரவரி மாதத்தில் தனது சக ஊழியர்களுக்காக உணவு தயாரித்தார். அதை அவர்கள் காலைத் தேநீர் இடைவேளையில் பகிர்ந்து உண்டனர்.
ஆனால், 58 வயதான அந்தப் பெண் மதிய உணவின்போது மீதமிருந்த உணவைச் சாப்பிடத் திரும்பியபோது, உணவில் பிரகாசமான பச்சை நிறத் துகள்கள் இருப்பதையும், அதைச் சுவைத்த பிறகு தனது நாக்கு உணர்விழந்துவிட்டதைப் போலத் தோன்றியதையும் கவனித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுடன் உறவில் இருந்ததாகக் கூறும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த நபர், பல மாதங்கள் நீண்ட விசாரணைக்குப் பிறகு, மற்றொருவரின் உயிர், உடல்நலம் அல்லது பாதுகாப்பை ஆபத்துக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவர் நவம்பர் 5 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். 43 வயதான அந்தப் பெண், அவரது பெயர் வெளியிடப்படாத நிலையில், உணவு வைக்கப்பட்டிருந்த பணியாளர் ஓய்வறைக்குத் திரும்புவதற்கு முன்பு ஒரு ரசாயனக் களஞ்சியக் கூடத்திற்குச் சென்றதாக காவல்துறை குற்றம் சாட்டுகிறது.
அதைச் சுவைத்த பிறகு, இதனால் பாதிக்கப்பட்டதாகக் கூறும் நபர், அந்த உணவை துப்பறிவாளர்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் அந்தப் பொருள் மெட்டால்டிஹைடு (metaldehyde) என்ற நத்தை கொல்லும் நச்சுப்பொருள் என்பதை அடையாளம் கண்டனர்.
இந்த விஷம் கடுமையான காயங்களையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்தக் கூடும் என்று ஆணையர் கோல் பிளாங்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செவென் நெட்வொர்க் வெளியிட்ட தகவலின்படி, "நல்வாய்ப்பாக உணவைச் சுவைத்த நபர் ஏதோ சரியாக இல்லை என்பதை உணர்ந்துவிட்டது எங்களுக்கு மிகுந்த நிம்மதியைக் கொடுக்கிறது," என்று ஆணையர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































