விஜய் அமைச்சரவையில் புதிதாக அமைச்சராகும் 23 பேர் யார்? எந்த கட்சி?

தமிழக, விஜய் அமைச்சரவை விரிவாக்கம், 5 பெண் அமைச்சர், 7 பட்டியல் பிரிவு அமைச்சர்கள்

பட மூலாதாரம், TN DIPR

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிதாக 23 பேர் அமைச்சராக இன்று பதவியேற்கிறார்கள்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது. இந்நிகழ்வில், முதலில் வந்தே மாதரமும் பின்னர் தேசிய கீதமும் பாடப்பட்ட பின்னரே, மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அதன் பின்னர், புதிய அமைச்சர்களாக ஸ்ரீநாத், கமலி உள்ளிட்ட 23 பேரும் பதவியேற்று வருகின்றனர். அவர்களுக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

முன்னதாக விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவிலும் இதே வரிசையில் பாடப்பட்டதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் தவெக ஆதரவு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை," என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சர்கள் பட்டியல்

புதிய அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதன்படி,

1. ஸ்ரீநாத் (தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி)

2. கமலி (அவினாசி சட்டமன்றத் தொகுதி)

3. சி.விஜயலஷ்மி (குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி)

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

4. ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி)

5. வினோத் (கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி)

6. ராஜீவ் (திருவாடானை சட்டமன்றத் தொகுதி)

7. ராஜ்குமார் (கடலூர் சட்டமன்றத் தொகுதி)

8. காந்திராஜ் (அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி)

9. மதன் ராஜா (ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி)

10. ஜெகதீஷ்வரி (ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி)

11. ராஜேஷ்குமார் (கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி)

12. விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)

13. லோகேஷ் தமிழ்ச் செல்வன் (ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி)

14. விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி)

15. ரமேஷ் (ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி)

16. விஸ்வநாதன் (மேலூர் சட்டமன்றத் தொகுதி)

17. குமார் (வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி)

18. தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி)

19. சம்பத் குமார் (கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி)

20. முகமது ஃபர்வஸ் (அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி)

21. சரத்குமார் ( தாம்பரம் சட்டமன்றத் தொகுதி)

22. மேரி வில்சன் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி)

23. விக்னேஷ் (கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி)

தமிழக, விஜய் அமைச்சரவை விரிவாக்கம், 5 பெண் அமைச்சர், 7 பட்டியல் பிரிவு அமைச்சர்கள்
தமிழக, விஜய் அமைச்சரவை விரிவாக்கம், 5 பெண் அமைச்சர், 7 பட்டியல் பிரிவு அமைச்சர்கள்

விஜய் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்படும் 23 அமைச்சர்களில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய இருவரும் காங்கிரசைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் தவெகவைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம், தவெக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் இடம் பெற மறுத்துவிட்டது தெளிவாகிறது. ஏனெனில், அந்த கட்சிகள் இன்று காலை தங்களது முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருந்தன.

பெண்கள், பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்?

விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு விஜய் அமைச்சரவையில் கீர்த்தனா, கமலி, விஜயலட்சுமி, ஜெகதீஸ்வரி ஆகிய 4 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள்.

விஜய் அமைச்சரவையில் கமலி, விஸ்வநாதன் , ராஜ்மோகன், லோகேஷ் தமிழ்செல்வன், தென்னரசு, காந்திராஜ், மதன்ராஜா ஆகியோர் ஆகிய 7 பேர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

தமிழக, விஜய் அமைச்சரவை விரிவாக்கம், 5 பெண் அமைச்சர், 7 பட்டியல் பிரிவு அமைச்சர்கள்

பட மூலாதாரம், Kamali

சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை பிடித்த தவெக, திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 10ம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். மே 13 அன்று அவருடைய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிலும் விஜய் வெற்றிபெற்றார்.

திமுக கூட்டணி கட்சிகள் தவிர்த்து, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரின் தலைமையிலான அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.

விஜயுடன் தவெக எம்எல்ஏக்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார், அருண் ராஜ், கீர்த்தனா, பிரபு, ராஜ்மோகன், வெங்கட்ரமணன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாதது குறித்தும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாதது குறித்தும் கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், மே 16 அன்று அமைச்சர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி விஜய் அமைச்சரவையில் சேரும் என்று அறிவிக்கப்பட்டது.

"காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோரை தமிழ்நாடு அமைச்சரவையில் இணைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். அவர்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்," என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக, விஜய் அமைச்சரவை விரிவாக்கம், 5 பெண் அமைச்சர், 7 பட்டியல் பிரிவு அமைச்சர்கள்

விசிக, ஐயூஎம்எல், இடதுசாரிகளுக்கு அழைப்பு

இந்தச் சூழலில், விசிக, இடதுசாரி கட்சிகள், முஸ்லிம் லீக் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று அழைப்புவிடுத்தார்.

தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுகவினர் அமைச்சரவையில் இடம்பெறுவார்களா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை. "தோழமையுடன் தான் ஆதரவு தெரிவித்ததாக கூறினார்கள். யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அவர்களின் உரிமை" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு