You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
'இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்' - இதுவரை தெரிந்தது என்ன?
இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த விமானத்தில் இருந்த குழுவினரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
'தொடர்ந்து 7வது தோல்வி' - சேப்பாக்கத்தில் சிஎஸ்கே கோட்டைவிட்டது எங்கே?
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் 209 ரன்கள் எடுத்தது. அதை 18.4 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் சேஸ் செய்தது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த சீசனில் சென்னை அணியின் முதல் 'ஹோம்' போட்டி இதுதான்.
'யார் இந்த தேவதை..' - பாடகர் ஹரிஹரனின் பிரபல 8 பாடல்கள்
இன்று (ஏப்ரல் 3) பாடகர், இசையமைப்பாளர் ஹரிஹரனுக்கு பிறந்தநாள். தமிழில் அவர் பாடிய பிரபலமான சில பாடல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' - குவைத் தாக்குதல் எச்சரிக்கும் ஆபத்து
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதலை அதிகரித்ததை தொடர்ந்து, இரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹோர்மூஸ் நீரிணையை 'திறக்க' போர் கப்பல்கள் ஏன் அனுப்பப்படவில்லை?
இரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் மோதலால் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கி ஆயிரக்கணக்கான மாலுமிகள் தவித்து வரும் நிலையில், இந்த நெருக்கடியைத் தீர்க்க ராணுவ பலத்தை விட இரான் அரசுடனான ராஜதந்திர பேச்சுவார்த்தையே அவசியம் என வலியுறுத்தப்படுகிறது
மலிவு டிரோன்கள் மூலம் வளைகுடா நாடுகளுக்கு இரான் ஏற்படுத்தும் மறைமுக ஆபத்து என்ன?
இரான் நாட்டின் மலிவான ட்ரோன்கள் இஸ்ரேலிய வான் பாதுகாப்பை ஊடுருவிப் பெரும் பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்துவதால், இந்தியா தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்த பல்லாயிரக்கணக்கான குறைந்த விலை காமிகாஸி ட்ரோன்களையும், அவற்றை எதிர்கொள்ளும் மலிவான 'கவுண்டர் ட்ரோன்' அமைப்புகளையும் விரைந்து கொள்முதல் செய்ய வேண்டியது அவசியமாகும்.
தொடர்ந்து 6 தோல்விகள்: சேப்பாக்கத்தில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
2025 சீசனில் சேப்பாக்கத்தில் ஆடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றது. சீசனின் முதல் போட்டியில் அந்த வெற்றி வந்த பிறகு, 6 தோல்விகளுமே தொடர்ச்சியாக வந்தன.
நேரலை, அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலக அறிவுறுத்தல்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
வளைகுடா நாடுகள் பிளவுகளை மறந்து இரானுக்கு எதிராக ஒன்றிணையுமா?
இரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் வளைகுடா நாடுகளின் ‘பாதுகாப்பான நாடுகள்’ பிம்பத்தை உலுக்கியுள்ளது. இரான் போரினால் இவை மறுசீரமைக்கப்பட்டு ராணுவமயமாக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பிரிட்டனின் "அரசியல் செல்வாக்கை" மறுவரையறை செய்த சூயஸ் நெருக்கடி - அதிகாரம் கைமாறிய வரலாறு
கடந்த 1956ஆம் ஆண்டின் சூயஸ் நெருக்கடி ஒரு பிராந்திய மோதல் மட்டுமல்ல. அது ஏகாதிபத்திய செல்வாக்கு, தேசியம் மற்றும் சர்வதேச கூட்டணிகளை மறுவரையறை செய்த ஒரு திருப்புமுனையாகும். இந்த நெருக்கடி எப்படி, ஏன் உருவானது?
காணொளி, காணொளி: இந்தியாவில் தொடங்கிய பிரமாண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு, கால அளவு 1,47
உலகத்திலேயே மிகப்பெரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கியுள்ளது.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
நாமக்கல்: பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கு அருகருகே தனித்தனி அங்கன்வாடி மையங்களா?
நாமக்கல் அருகே பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கென அருகருகே தனித்தனி அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. 'பிரச்னைகளைப் பேசுவோம்' என்ற புதிய முயற்சியில் பிபிசி தமிழுக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கே எங்களது குழு கள ஆய்வு செய்தது.
'அடுப்பில் கரி அறவே படியாது': இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு
இந்திய விஞ்ஞானிகள் சமையல் எரிவாயுவுக்கு மாற்றாக செயற்கை எரிபொருளை கண்டுபிடித்துள்ளனர். எல்பிஜிக்கு மாற்றாக அமையக்கூடிய இந்த எரிபொருளைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
தினசரி காலையில் வெந்நீர் குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது என்பது உண்மையா?
வெதுவெதுப்பான அல்லது சூடான நீரை அருந்துவது உடல் நலனுக்கு நல்லது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்படுகிறது. இது பாரம்பரிய சீன மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் ஒரு பகுதியாக உள்ளது. அது பற்றி அறிவியல் கூறுவது என்ன?
இரானுக்கு பதிலடி தராத சௌதி உள்ளிட்ட இந்த 5 வளைகுடா நாடுகளின் ராணுவ பலம் என்ன?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை இரான் குறிவைக்கத் தொடங்கியது. அமெரிக்கத் தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்திய அந்த நாடுகளும் வலுவான ராணுவ சக்தியைக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்த நாடுகள் இதுவரை இரான் மீது தாக்குதல் நடத்தவில்லை.
ஜிபிஎஸ் போன்ற இந்தியாவின் சொந்த வழிகாட்டும் செயற்கைக்கோள் திட்டம் செயலிழந்தது ஏன்?
ஐஆர்என்எஸ்எஸ் - 1எஃப் செயற்கைக்கோளில் இருந்த அணுக் கடிகாரம் கடந்த மார்ச் 13-ஆம் தேதி செயலிழந்ததுடன் இந்தியாவின் சொந்த 'ஜிபிஎஸ்' எனப் பெயர் பெற்ற நாவிக் (NavIC) அமைப்பின் செயல்பாடு முடங்கியது. முன்னர் இந்த அமைப்பு இந்திய பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பு - ஐஆர்என்எஸ்எஸ் (Indian Regional Navigation Satellite System - IRNSS) என்று அழைக்கப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் செயல் முடக்கத்துடன் இந்தியாவின் தன்னாட்சி வழிகாட்டும் திறன் முடிவுக்கு வந்துள்ளது.
'கிரீன்லாந்து திடீர் குளிர்ச்சியால் இந்தியாவில் வறட்சி' - 8,200 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது?
வடக்கு அட்லாண்டிக் பகுதியிலும் கிரீன்லாந்திலும் ஏற்பட்ட திடீர் குளிர்ச்சி, இந்தியாவின் பருவமழையை பலவீனப்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது என்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 8,200 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது?
இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனக் கிராமங்கள் மீது தீவிரவாத யூதக் குடியேறிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி, வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய வயல்களுக்குத் தீ வைத்துள்ளனர்.
கோவையை ஒட்டி கட்சிக்கொடி, போஸ்டர், சுவர் விளம்பரமே தென்படாத கிராமம் - 1991ல் என்ன நடந்தது?
கோவை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள சோமையம்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அடையாளங்கள் தொடர்பான கட்டுப்பாடு, ஊர் மக்களால் ஒருங்கிணைந்து கடைபிடிக்கப்படுகிறது.
போர் எப்போது முடியும்? அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானின் விருப்பம் என்ன?
பெரும்பாலான மக்கள் இந்தப் போர் சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் எந்த நிபந்தனைகளின் கீழ்? அங்குதான் நிலைப்பாடுகள் வேறுபடுகின்றன. அமெரிக்கா, இஸ்ரேல், இரான் மூன்றும் இந்த போர் எவ்வாறு முடிய விரும்புகின்றன?
வருசநாடு அருகே புலிகள் வாழும் காப்புக்காட்டில் 5 பேருக்காக செயல்படும் வாக்குச்சாவடி
தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதியில் ஐந்து வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதன் மூலம் ஊடகங்களில் இப்பகுதி கவனம் பெற்றது.
மாதாந்திர ஊதிய ஆவணம்(Pay slip) இல்லாதவர்கள் வீட்டுக்கடன் பெறுவது எப்படி?
சிறிய அல்லது பெரிய தொழில் நடத்துபவர்கள், முறைசாரா துறையில் கைவினைஞர்களாகப் பணிபுரிபவர்கள், விவசாயிகள் அல்லது கடை நடத்துபவர்களுக்கு, வேலைக்குச் செல்பவர்களைப் போல ஒவ்வொரு மாதமும் சம்பளச் சீட்டு கிடைப்பதில்லை. அப்படியென்றால் அத்தகையவர்கள் என்ன செய்ய வேண்டும்? சம்பளச் சீட்டு இல்லாமல் அவர்கள் எவ்வாறு வீட்டுக் கடன் பெற முடியும்?
நீங்கள் படித்து முடித்ததும் முதல் வேலை கிடைக்க என்ன செய்யலாம்? 5 யோசனைகள்
வேலை கிடைப்பதற்கு இளைஞர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்ய வேண்டும் என வேலைவாய்ப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்