காணொளி: 'வீதிகளில் இறங்கி போராடுங்கள்' - அழைப்பு விடுக்கும் காக்ரோச் ஜனதா கட்சி

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'வீதிகளில் இறங்கி போராடுங்கள்' - அழைப்பு விடுக்கும் காக்ரோச் ஜனதா கட்சி
பிரசுரிக்கப்பட்டது

காக்ரோச் ஜனதா கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ''நாங்கள் பின்வாங்க மாட்டோம். நாட்டின் குடிமக்கள் அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் போராட வேண்டும், வீதிகளில் இறங்க வேண்டும். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கே அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும். பிகார், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், டெல்லியை சேர்ந்த நம் சகோதர சகோதரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா என அனைத்து இடங்களிலிருந்தும், தயவுசெய்து இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுங்கள் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இளைஞர்கள் வீதிகளில் இறங்கி அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் இந்த அமைப்பு இப்படி இயங்கக் கூடாது, இந்த அமைப்பு உடைந்துவிட்டது, இந்த அமைப்பு ஊழல் நிறைந்தது.மேலும் இந்த அமைப்பு இரண்டு நபர்களின் பேச்சின்படி மட்டுமே இயங்குகிறது, அவர்களின் சேவைக்காக மட்டுமே இயங்குகிறது. அது மோதி மற்றும் ஷா.'' என்றார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு