காணொளி: விடுவிக்கப்பட்ட அபிஜித் திப்கே சொன்னது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: விடுவிக்கப்பட்ட அபிஜித் திப்கே சொன்னது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். லைவ் லா வெளியிட்ட செய்தியின்படி, ஓராண்டுக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையுடன் இவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். விடுவிக்கப்பட்ட அபிஜித் திப்கே சொன்னது என்ன?

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், காக்ரோச் ஜனதா கட்சி பின்வாங்காது மிரட்டலுக்கும் அடிபணியாது. அக்டோபர் 10 சர்வாதிகார வீழ்ச்சியின் தொடக்கமாக அமையும் என கூறி உள்ளார்.

மேலும், அவரது பாட்டி உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் இந்த துயரமான நேரத்தில் குடும்பத்துடன் இருப்பதற்காக தனது கிராமத்துக்கு செல்வதாகவும் அபிஜித் திப்கே கூறி உள்ளார்.

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 10ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதற்காக டெல்லி வந்த அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா டெல்லி விமான நிலையத்தில் விமானத்தில் வைத்தே தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு