மதுரையில் விஜயை காண சென்ற இடத்தில் 15 பேர் மயங்கி விழுந்தனர்
மதுரையில் விஜயை காண சென்ற இடத்தில் 15 பேர் மயங்கி விழுந்தனர்
பிரசுரிக்கப்பட்டது
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க வந்த முதலமைச்சர் விஜயை பார்க்க வந்தவர்கள் சிலர் மயங்கிவிழுந்தனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
இதனால், மருத்துவமனை முன்பு ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் கடும் வெயிலில் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்ததாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது. 15-க்கும் மேற்பட்டோர் மயங்கியதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பிடிஐ முகமை கூறி உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



