காணொளி: 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' - முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்

காணொளிக் குறிப்பு, காணொளி: தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்
காணொளி: 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' - முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையில் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை' முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கிவைத்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு அவர் மோதிரத்தை அணிவித்தார்.

முன்னதாக இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போனது.

இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

மறுபுறம், நிதிப் பற்றாக்குறை நிலவும் சூழலில் இத்திட்டத்தை செயல்படுத்துவதை திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு