BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
இரானில் வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்த வீரரை தேடும் போட்டியில் அமெரிக்கா, இரான்
இரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போரின் நடுவே இரானில் அமெரிக்க விமானப்படை வீரரை தேடும் பணி எவ்வளவு கடினமாக இருக்கும்?
போர்சார் தேடுதல் மற்றும் மீட்பு (சிஎஸ்ஏஆர்) பணிகள், அமெரிக்க மற்றும் நட்பு நாட்டு ராணுவங்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் பணிகளிலேயே மிகவும் சிக்கலான மற்றும் நேரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பணிகளாகக் கருதப்படுகின்றன.
'போரை விட பசி எங்களை கொன்றுவிடும்' - இரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் நிலை என்ன?
இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னும் தாயகம் திரும்பவில்லை. அங்குள்ள அவர்களின் நிலை என்ன?
ஐபிஎல்: ஒரே நாளில் களம் இறங்கும் 4 தமிழக வீரர்கள் - சவால்களும் வாய்ப்புகளும் என்ன?
டைட்டன்ஸ் வீரர்கள் மற்றும் நடராஜன் ஆகியோர் இன்றும் களமிறங்கப்போகிறார்கள். அவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாம்; அவர்கள் இந்தப் போட்டியில் சந்திக்கப்போகும் சவால்கள் என்ன; கடந்த போட்டியில் களமிறக்கப்படாத சாய் கிஷோருக்கு இன்று வாய்ப்பு கிடைக்குமா என்பது போன்ற விஷயங்களை அலசுவோம்.
அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு இந்த 2 தொகுதிகள் காரணமா?
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாஜக 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று (ஏப்ரல் 3) வெளியிட்டது. அப்பட்டியலில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை.
அமெரிக்க போர் விமானம் வீழ்த்தப்பட்ட பிறகு இரானில் என்ன பேசப்படுகிறது?
தென் இரானில் அமெரிக்க F-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இரானில் என்ன பேசப்படுகிறது?
இரான் போரால் இந்தியாவில் ஆணுறை விலை உயரும் ஆபத்து ஏன்?
மேற்கு ஆசிய போர் பல தொழில்துறைகளைப் பாதித்துள்ளது. தற்போது அது எதிர்பாராத வகையில், வாழ்க்கைமுறை நுகர்வுப் பொருளாகக் கருதப்படும் ஆணுறை உற்பத்தித் துறையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
நேரலை, ‘அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பேச்சுவார்த்தைகளை பாதிக்காது’- டிரம்ப்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
'2வது போட்டியிலே இப்படியா?' - சிஎஸ்கே தோல்விக்கான 4 காரணங்கள் என்ன?
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வாங்கிய பஞ்சாப் கிங்ஸ் ஓப்பனர் பிரியான்ஷ் ஆர்யா சந்தித்தது வெறும் 11 பந்துகள் தான். அந்த 11 பந்துகளிலேயே ஆட்டத்தை மாற்றக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தினார் அவர்.
'யார் இந்த தேவதை..' - பாடகர் ஹரிஹரனின் பிரபல 8 பாடல்கள்
இன்று (ஏப்ரல் 3) பாடகர், இசையமைப்பாளர் ஹரிஹரனுக்கு பிறந்தநாள். தமிழில் அவர் பாடிய பிரபலமான சில பாடல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயமா?' - குவைத் தாக்குதல் எச்சரிக்கும் ஆபத்து என்ன?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதலை அதிகரித்ததை தொடர்ந்து, இரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
நாமக்கல்: பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கு அருகருகே தனித்தனி அங்கன்வாடி மையங்களா?
நாமக்கல் அருகே பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கென அருகருகே தனித்தனி அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. 'பிரச்னைகளைப் பேசுவோம்' என்ற புதிய முயற்சியில் பிபிசி தமிழுக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கே எங்களது குழு கள ஆய்வு செய்தது.
'அடுப்பில் கரி அறவே படியாது': இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு
இந்திய விஞ்ஞானிகள் சமையல் எரிவாயுவுக்கு மாற்றாக செயற்கை எரிபொருளை கண்டுபிடித்துள்ளனர். எல்பிஜிக்கு மாற்றாக அமையக்கூடிய இந்த எரிபொருளைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
தினசரி காலையில் வெந்நீர் குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது என்பது உண்மையா?
வெதுவெதுப்பான அல்லது சூடான நீரை அருந்துவது உடல் நலனுக்கு நல்லது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்படுகிறது. இது பாரம்பரிய சீன மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் ஒரு பகுதியாக உள்ளது. அது பற்றி அறிவியல் கூறுவது என்ன?
இரானுக்கு பதிலடி தராத சௌதி உள்ளிட்ட இந்த 5 வளைகுடா நாடுகளின் ராணுவ பலம் என்ன?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை இரான் குறிவைக்கத் தொடங்கியது. அமெரிக்கத் தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்திய அந்த நாடுகளும் வலுவான ராணுவ சக்தியைக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்த நாடுகள் இதுவரை இரான் மீது தாக்குதல் நடத்தவில்லை.
ஜிபிஎஸ் போன்ற இந்தியாவின் சொந்த வழிகாட்டும் செயற்கைக்கோள் திட்டம் செயலிழந்தது ஏன்?
ஐஆர்என்எஸ்எஸ் - 1எஃப் செயற்கைக்கோளில் இருந்த அணுக் கடிகாரம் கடந்த மார்ச் 13-ஆம் தேதி செயலிழந்ததுடன் இந்தியாவின் சொந்த 'ஜிபிஎஸ்' எனப் பெயர் பெற்ற நாவிக் (NavIC) அமைப்பின் செயல்பாடு முடங்கியது. முன்னர் இந்த அமைப்பு இந்திய பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பு - ஐஆர்என்எஸ்எஸ் (Indian Regional Navigation Satellite System - IRNSS) என்று அழைக்கப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் செயல் முடக்கத்துடன் இந்தியாவின் தன்னாட்சி வழிகாட்டும் திறன் முடிவுக்கு வந்துள்ளது.
'கிரீன்லாந்து திடீர் குளிர்ச்சியால் இந்தியாவில் வறட்சி' - 8,200 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது?
வடக்கு அட்லாண்டிக் பகுதியிலும் கிரீன்லாந்திலும் ஏற்பட்ட திடீர் குளிர்ச்சி, இந்தியாவின் பருவமழையை பலவீனப்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது என்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 8,200 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது?
இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனக் கிராமங்கள் மீது தீவிரவாத யூதக் குடியேறிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி, வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய வயல்களுக்குத் தீ வைத்துள்ளனர்.
கோவையை ஒட்டி கட்சிக்கொடி, போஸ்டர், சுவர் விளம்பரமே தென்படாத கிராமம் - 1991ல் என்ன நடந்தது?
கோவை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள சோமையம்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அடையாளங்கள் தொடர்பான கட்டுப்பாடு, ஊர் மக்களால் ஒருங்கிணைந்து கடைபிடிக்கப்படுகிறது.
போர் எப்போது முடியும்? அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானின் விருப்பம் என்ன?
பெரும்பாலான மக்கள் இந்தப் போர் சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் எந்த நிபந்தனைகளின் கீழ்? அங்குதான் நிலைப்பாடுகள் வேறுபடுகின்றன. அமெரிக்கா, இஸ்ரேல், இரான் மூன்றும் இந்த போர் எவ்வாறு முடிய விரும்புகின்றன?
வருசநாடு அருகே புலிகள் வாழும் காப்புக்காட்டில் 5 பேருக்காக செயல்படும் வாக்குச்சாவடி
தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதியில் ஐந்து வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதன் மூலம் ஊடகங்களில் இப்பகுதி கவனம் பெற்றது.
மாதாந்திர ஊதிய ஆவணம்(Pay slip) இல்லாதவர்கள் வீட்டுக்கடன் பெறுவது எப்படி?
சிறிய அல்லது பெரிய தொழில் நடத்துபவர்கள், முறைசாரா துறையில் கைவினைஞர்களாகப் பணிபுரிபவர்கள், விவசாயிகள் அல்லது கடை நடத்துபவர்களுக்கு, வேலைக்குச் செல்பவர்களைப் போல ஒவ்வொரு மாதமும் சம்பளச் சீட்டு கிடைப்பதில்லை. அப்படியென்றால் அத்தகையவர்கள் என்ன செய்ய வேண்டும்? சம்பளச் சீட்டு இல்லாமல் அவர்கள் எவ்வாறு வீட்டுக் கடன் பெற முடியும்?
நீங்கள் படித்து முடித்ததும் முதல் வேலை கிடைக்க என்ன செய்யலாம்? 5 யோசனைகள்
வேலை கிடைப்பதற்கு இளைஞர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்ய வேண்டும் என வேலைவாய்ப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்

























































































