கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் புதிய படம்: சுவாரஸ்ய தகவல்கள்

சில சுவாரஸ்ய தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கும் புது படத்தின் சூட்டிங் டார்ஜீலிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். அந்த படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ…

  • ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக இப்படத்தில் நடிக்கிறார்.
  • கதைக்களம் ஊட்டியில் நடைபெறுவதாக காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அதை ஊட்டியில் எடுத்தால் சூட்டிங்கை காணவரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்பதால் டார்ஜீலிங் பகுதியில் படமாக்குகின்றனர்.
  • ரஜினிகாந்திற்கு கேரவன் கிடையாது. கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெறுவதால், அங்கு இருக்கும் ஒரு ஊழியரின் அறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • டார்ஜீலிங் பகுதியில் அடிக்கடி மழை பெய்வதால் சூட்டிங் சில மணி நேரம் தடைபடுகிறது.
  • சூட்டிங் மழையால் தடைபடுவதால் சில நாட்கள், அடுத்த நாள் காலை 6 மணி வரை சூட்டிங் தொடர்கிறது. அதன் பின் சில மணி நேரம் ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் சூட்டிங்கை தொடங்குகின்றனர்.
  • இரவு 3 மணிக்கு ஷாட் என்றாலும் 2.45 மணிக்கெள்ளாம் ரஜினிகாந்த் ஷாட்டுக்கு ரெடியாக இருப்பார்.
  • இந்த படத்தில் 200 கல்லூரி மாணவர்களுடன் நடிப்பதால் ரசித்து ரசித்து அவர் நடித்து வருகிறார்.
  • சின்ன சின்ன அரசியல் வசனங்கள் இருந்தாலும், ஆனால் இது அரசியல் படம் கிடையாது. பக்காவான கமர்ஷியல் படமாக உருவாகிறது
  • கபாலி, காலா போல 50 வயதுக்கு மேற்பட்டவராக ரஜினிகாந்த் நடிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :