காணொளி: குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிந்த புலி
காணொளி: குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிந்த புலி
பிரசுரிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுபீர்கடவு கிராமத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் புலி நடமாடிய காட்சி வெளியாகியுள்ளது. புதுபீர்கடவு வனப்பகுதியில் இருந்து அக்டோபர் 13ம் தேதியன்று வெளியேறிய புலி, கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிந்தது. இது குறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் ரோந்து வாகனத்தில் சென்று, ஒலி எழுப்பி, புலியை மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தி அனுப்பினர்.
குறிப்பு: இந்தச் சம்பவம் அக்டோபர் 13ம் தேதி நடைபெற்றது. வீடியோவில் தவறுதலாக தேதி அக்டோபர் 14 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



