காணொளி: பூட்டை உடைத்து பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதித்த எஸ்.பி - தற்போதைய நிலவரம் என்ன?

காணொளிக் குறிப்பு, பூட்டை உடைத்து பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதித்த எஸ்பி, தற்போதைய நிலவரம் என்ன?
காணொளி: பூட்டை உடைத்து பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதித்த எஸ்.பி - தற்போதைய நிலவரம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள குரால் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத சிறப்புப் பூஜையின்போது பட்டியலின மக்கள் வழிபட மற்றொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் கோவில் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஷகனாஸ், கோவில் பூட்டை உடைத்து பட்டியலின மக்களை உள்ளே சென்று வழிபட அனுமதித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ராமசாமி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கீழ்க்குப்பம் காவல்துறையினர் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அந்த கிராமத்தின் தற்போதைய களநிலவரத்தை பிபிசி தமிழ் நேரில் பதிவு செய்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு