காணொளி: சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார் மீட்பு
காணொளி: சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது
சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்ததை அடுத்து, தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. அப்போது இவ்வழியாக சென்ற கார் ஒன்று தண்ணீரில் சிக்கிக்கொண்டது.
காரில் இருந்தவர்கள் பத்திரமாக காரை விட்டு கீழே இறங்கிய நிலையில், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் கார் அப்புறப்படுத்தப்பட்டது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



