இலங்கையில் கம்பீர தோற்றம் கொண்ட காட்டு யானை உயிரிழந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, இலங்கையின் கம்பீரமான காவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு
இலங்கையில் கம்பீர தோற்றம் கொண்ட காட்டு யானை உயிரிழந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் உயரமான மற்றும் கம்பீரமான தோற்றத்தை கொண்ட காவன்திஸ்ஸ என்ற யானை உயிரிழந்துவிட்டது. சுமார் 11 அடி உயரத்தையும், சுமார் 6 அடி நீள தந்தங்களை கொண்ட காட்டு யானையாக காவன்திஸ்ஸ இருந்தது.

இந்த யானை மிக பிரமாண்ட உடல் அமைப்பை கொண்டிருந்தபோதிலும், இன்று வரை எந்தவொரு நபர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவோ எவரையும் காயப்படுத்தியதாகவோ சம்பவங்கள் பதிவாகவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சியம்பன்கமுவ பகுதியிலுள்ள வனப் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இந்த யானை காயமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தொடர் சிகிச்சைக்கு பின் ஓரளவு குணமடைந்து வந்த யானை, சில தினங்களுக்கு பின் காட்டு பகுதியில் விடுவிக்கப்பட்டது. எனினும், சில நாட்களில் காவன்திஸ்ஸவின் உடல் நிலை மோசமாகி உள்ளது.

இந்த நிலையில், சியம்பன்கமுவ பகுதியிலுள்ள ஒரு வயலில் காவன்திஸ்ஸ வீழ்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் சிகிச்சை அளித்த போதிலும் யானை அக்டோபர் 16-ஆம் தேதி இறந்தது.

குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ பகுதியை அண்மித்த வனப் பகுதியில் 2008-ஆம் ஆண்டு இந்த யானை முதல் முறையாக அடையாளம் காணப்பட்டது. இலங்கை மன்னராக விளங்கிய காவன்திஸ்ஸ மன்னரின் பெயரை 2015-ஆம் ஆண்டு இந்த யானைக்கு அரசாங்கம் சூட்டியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு