ஹோர்மூஸ் நீரிணையில் 11 இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்

காணொளிக் குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணையில் தாக்குதலுக்கு உள்ளான பெட்ரோ டால்பின் கப்பல்
ஹோர்மூஸ் நீரிணையில் 11 இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்
பிரசுரிக்கப்பட்டது

அக்டோபர் 11ம் தேதி ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் பெட்ரோ டால்பின் என்ற எண்ணெய் கப்பல் தாக்கப்பட்ட காட்சி இது.

11 இந்திய மாலுமிகளுடன் சென்ற எம்டி பெட்ரோ டால்பின் என்ற எண்ணெய் கப்பல், சோஹார் நங்கூரமிடும் தளத்தில் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.

இந்திய மாலுமிகளில் ஒன்பது பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக உள்ள நிலையில், காணாமல் போன இரண்டு இந்தியர்களை தேடும் பணியில் கடலோரக் காவல்படையினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரியும் காட்சியை நேரில் கண்டவர் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த கட்சி தற்போது வெளியாகியுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு