டெஸ்லா தயாரித்துள்ள பறக்கும் காரில் எத்தனை பேர் பயணிக்கலாம்?
புகையைக் கக்கியபடி வேகமாகப் பறக்கும் இந்தக் கார்... ஏதோ திரைப்படக் காட்சி அல்ல. ஈலோன் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லா உருவாக்கியுள்ள பறக்கும் கார் மாதிரியின் செயல்விளக்கக் காட்சி இது.
டெஸ்லா தனது ரோட்ஸ்டர் காரை மறுவடிவமைத்து, பறக்கும் திறன் கொண்ட வாகனமாக மாற்றியுள்ளது.
தனது எக்ஸ் பக்கத்தில் இந்த காணொளியை பகிர்ந்த ஈலோன் மஸ்க், "எதிர்காலத்தில் உண்மையிலேயே பறக்கும் கார்கள் இருக்கும் போலத் தெரிகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இரண்டு பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் காரில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய குளிர்வாயு உந்துவிசைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், பறக்கும் அம்சங்களைக் கொண்ட இந்த வாகனங்கள் பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளதா என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை.
விரிவாகக் காணொளியில்…
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



