காணொளி: ஏமன் அதிபர் மாளிகை மீது ஹூத்தி தாக்குதல்

காணொளிக் குறிப்பு,
காணொளி: ஏமன் அதிபர் மாளிகை மீது ஹூத்தி தாக்குதல்
பிரசுரிக்கப்பட்டது

தெற்கு ஏமனில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் அமைந்துள்ள அதிபர் மாளிகை மீது ஹூத்திகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாகவும் 16 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அல்-மாஷிக் மாளிகையை 5 பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியதாகவும், இந்த சம்பவத்தில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் காயமின்றி உயிர் தப்பியதாகவும் தகவல் துறை அமைச்சர் மொஅம்மர் அல்-எரியானி பிபிசியிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு