டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை காவலில் எடுக்கும் காவல்துறை - என்ன நடக்கிறது? நேரலை

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை காவலில் எடுக்கும் காவல்துறை - என்ன நடக்கிறது? நேரலை
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)

டெல்லி காவல்துறையின் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனரும் தலைவருமான அபிஜித் திப்கே தனது முதல் எதிர்வினையை வெளியிட்டுள்ளார்.

அபிஜித் திப்கே, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) பிரதமர் மோதியை கடுமையாக விமர்சித்து, அவரை "கோழை" என்று குறிப்பிட்டார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பிரதமராக இருக்கும் மோதி, இந்தியாவுக்கே அவமானம். அவரைப் போல் இவ்வளவு கோழைத் தனமும் அச்சுறுத்தும் மனப்பான்மையும் கொண்ட ஒருவரை இந்த நாடு இதுவரை பார்த்ததில்லை" என்று தெரிவித்துள்ளார்.

அஷுதோஷ் ரங்கா எக்ஸ் பக்கத்தில், "ஞானேஷ் குமார் ஒரு துரோகி. அவர் பதவி விலக வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட துரோகிகளை அகற்றுவதற்காக என் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டியிருந்தாலும் நான் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

காவலில் 23 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டிருந்த அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மூவரும் டெல்லி கன்டோன்மன்ட் பகுதியில் உள்ள நிர்வாக மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அபிஜித் திப்கே கூறியது என்ன?

'காக்ரோச் ஜனதா கட்சி' நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் மேற்கொண்ட பெரிய அளவிலான நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்திருந்தது. இதற்குப் பதிலளித்துள்ள இந்தியா, அந்தக் கவலைகள் அடிப்படையற்றவை என்று கூறியுள்ளது.

ஜெனீவாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமையை இந்திய அரசமைப்பு உறுதி செய்துள்ளது. வலுவான நிறுவனங்கள், சுதந்திரமான நீதித்துறை, சுதந்திரமான ஊடகங்கள் மூலம் இந்த உரிமை பாதுகாக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை காவலில் எடுக்கும் காவல்துறை - என்ன நடக்கிறது? நேரலை

டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியிலுள்ள இன்னர் சர்கிளில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை காவல்துறையினர் காவலில் எடுத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை கானாட் பிளேஸில் இருந்து காவலில் எடுக்கப்பட்டவர்களில், இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) மற்றும் அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு (AIYF) ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய மாணவர்களும் அடங்குவர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை காவலில் எடுக்கும் காவல்துறை - என்ன நடக்கிறது? நேரலை

காக்ரோச் ஜனதா கட்சி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. சிஜேபி உறுப்பினரான அஜிங்க்யா ஷிண்டே, போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஜந்தர் மந்தருக்கு செல்வதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு தலைவர் நேஹா போராவும் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை அறிவித்தார். போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்டும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை காவலில் எடுக்கும் காவல்துறை - என்ன நடக்கிறது? நேரலை

"ஒவ்வொரு ஜனநாயக நாட்டையும் போலவே, இந்தியாவிலும் பொது ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில் விதிக்கப்படும் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே மக்கள் இந்த உரிமையைப் பயன்படுத்துகின்றனர். அதிகாரிகளின் நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு குறை தொடர்பாகவும் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"எனவே, மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ள கவலைகள் தேவையற்றவை. அவை இந்தியாவின் உள்விவகாரங்களில் செய்யப்படும் தேவையற்ற தலையீடு. மனித உரிமைகள் அமைப்பு பாரபட்சமின்றிச் செயல்பட வேண்டிய தனது பொறுப்புக்கு ஏற்ப, பிற இடங்களில் நடக்கும் பெரிய அளவிலான போராட்டங்கள் குறித்தும் சமமான கவனம் செலுத்த வேண்டும்" என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை காவலில் எடுக்கும் காவல்துறை - என்ன நடக்கிறது? நேரலை

முன்னதாக, டெல்லியில் போராட்டக்காரர்கள், போராட்டத் தலைவர்கள், குடிமைச் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்திருந்தது.

மேலும், தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருந்தது.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியின் இப்போதைய கோரிக்கை என்ன?

காவலில் உள்ள காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர்களின் நிலை என்ன?

முன்னதாக, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தங்கள் கட்சித் தலைவர்களான அபிஜித் தீப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு டெல்லி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் உள்ள நிர்வாக நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று காக்ரோச் ஜனதா கட்சி முன்னதாகத் தெரிவித்திருந்தது.

எஸ்ஐஆர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
படக்குறிப்பு, மும்பையில் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் (கோப்புக் காட்சிகள்)

நேற்று (அக்டோபர் 10) காலை மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்த கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா விமானத்தில் இருந்து இறங்குவதற்கும் முன்பாகவே உள்ளே வைத்தேதே காவல்துறையால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து, சிஜேபி-யின் சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அபிஜித், அசுதோஷ், சௌரவ் ஆகியோர் இன்று காலை 9 மணிக்கு டெல்லி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் உள்ள நிர்வாக நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, டெல்லி: போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அபிஜித் திப்கே

இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, மூன்று பேரும் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார். சனிக்கிழமை அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மோதி–ஷா எந்த அளவுக்குப் பயந்துபோயுள்ளனர் என்றால், இன்று அவர்கள் குழந்தைகளைக் கூடக் கடத்துகிறார்கள். இதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அபிஜித் திப்கே உள்பட சிஜேபி தலைவர்கள் மூவரும் விடுவிப்பு

காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோர் காவல் துறையின் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லைவ் லா வெளியிட்ட தகவலின்படி, சிஜேபி-யின் இந்த மூன்று முக்கியத் தலைவர்களும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்களை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, விமானத்தில் வைத்தே காவலில் எடுக்கப்பட்ட அபிஜித் திப்கே

மூவரின் வழக்கறிஞரான சௌதிக் பானர்ஜி இதை உறுதிப்படுத்தியதோடு, அவர்கள் தற்போது அங்கிருந்து வெளியே செல்லலாம் என்றும் தெரிவித்தார்.

உண்மையில், அக்டோபர் 10 அன்று டெல்லி விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கியவுடன், திப்கே உள்ளிட்ட சிஜேபி-யின் மூன்று தலைவர்களையும் டெல்லி காவல்துறை தடுத்து வைத்திருந்தது.

அதன் பின்னர், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென சிஜேபி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. அதற்கும் முன்னதாக, யூடியூபர் துருவ் ரத்தீயும் ஏற்கெனவே காவல்துறையின் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் தொடருமா?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி தில்லியில் ஞாயிற்றுக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

அபிஜித் திப்கே
படக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவர் நேகா போரா, ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

சனிக்கிழமை தில்லி ஹாட் பகுதியும் போராட்டக்காரர்களால் ஜந்தர் மந்தர் போல மாற்றப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், ஞாயிற்றுக்கிழமை வேறொரு இடத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளார்.

"ஞானேஷ் குமாரை பதவியில் வைத்திருப்பதற்காகச் சாதாரண மக்களைச் சிறையில் அடைக்கப் போகிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கோரி ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவோம்" என்று அவர் கூறினார்.

டெல்லி சிஜேபி போராட்டம்

மறுபுறம், காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அஜிங்க்யா ஷிண்டேவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போராட்டம் குறித்துக் காணொளி ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், "ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை நான் வீட்டுக்குத் திரும்பப் போவதில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

காலை 10 மணிக்கு மீண்டும் ஜந்தர் மந்தரை நோக்கிப் பேரணியாகச் செல்லப்போவதாகக் கூறிய அஜிங்க்யா ஷிண்டே, பொதுமக்கள் பெருமளவில் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு