யுக்ரேன் பல்பொருள் அங்காடி மீது டிரோன் தாக்குதல்
யுக்ரேன் பல்பொருள் அங்காடி மீது டிரோன் தாக்குதல்
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேனின் ஒடேசா பிராந்தியத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் கூரையில் டிரோன் வெடித்துச் சிதறும் காட்சியை, சிசிடிவி பதிவுகள் மூலம் பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என்று யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
யுக்ரேன் மீது ரஷ்யா 2022 பிப்ரவரியில் முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது. அப்போது தொடங்கிய ரஷ்யாவின் போர், தற்போது ஐந்தாவது ஆண்டாக நீடிக்கிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



