உண்ணிக்காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது? மருத்துவர் விளக்கம்
உண்ணிக்காய்ச்சல் என்பது ஒரு பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று. இது சிறிய செடிகளில் காணப்படும் ஒரு வகை உண்ணியில் காணப்படும். உண்ணிகள் மனிதர்களை கடிக்கும் போது மனிதர்களுக்கு உண்ணிக்காய்ச்சல் நோய் உண்டாகிறது.
இந்நோய் ஆங்கிலத்தில் ஸ்க்ரப் டைஃபஸ் (Scrub Typhus) என்று அழைக்கப்படுகிறது. ஓரியன்சா ட்சுட்சுகா முஷி (Orientia tsutsugamushi) எனும் பாக்டீரியாவால் இந்நோய் ஏற்படுகிறது.
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த 20 வயது மாணவர் ஒருவர் கடந்த வாரம் உண்ணிக் காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்துவிட்டார்.
பொதுவாக விளைநிலங்கள், செடிகொடிகள் நிறைந்த பகுதி ஆகியவற்றிலேயே இந்த பாக்டீரியா இருக்கும். நகர்ப்புறங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல."இந்தியாவில் குறிப்பிட்ட நில வகைகளில் மட்டுமே ஏற்படும் நோயாக இனியும் இது இல்லை" என்று 2024-ம் ஆண்டு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து தொற்றுநோய் நிபுணர் ராமசுப்ரமணியன் அளித்துள்ள விளக்கத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



