காணொளி: பாங்காக்கில் 50 ஆண்டுகளாக கொதிக்கும் மாட்டிறைச்சி சூப்

காணொளிக் குறிப்பு, காணொளி: 50 ஆண்டுகளாக கொதிக்கும் மாட்டிறைச்சி சூப்
காணொளி: பாங்காக்கில் 50 ஆண்டுகளாக கொதிக்கும் மாட்டிறைச்சி சூப்
பிரசுரிக்கப்பட்டது

பாங்காக்கில் உள்ள குடும்பம் நடத்தும் உணவகம் ஒன்று, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே மாட்டிறைச்சி சூப்பைக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தி வருகிறது. 'வட்டனா பானிச்' என்ற அந்த உணவகத்தில், மூன்றாம் தலைமுறை உரிமையாளரான நட்டாபோங் கவீன்டவாங் தனது தாத்தா தொடங்கிய பாரம்பரியத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இதற்கென எந்தவொரு குறிப்பிட்ட செய்முறையும் கிடையாது; அனுபவம், நினைவாற்றல் மற்றும் தினசரி சுவை கூடும் அந்தச் சூப் ஆகியவற்றை மட்டுமே இந்த உணவகம் நம்பியுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள வழக்கமான வாடிக்கையாளர்களையும், சுவைக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு