காணொளி: ஏஐ கடவுளுக்கு பதிலாக சாத்தானை வழிபட வைக்குமா?
செயற்கை நுண்ணறிவு நம் அன்றாட வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக மாறிவரும் நிலையில், இந்தத் தொழில்நுட்பம் பைபிளில் கூறப்படும் தீர்க்கதரிசனங்களில் பங்கு வகிக்கக்கூடும் என்று சில கிறிஸ்தவ மதத் தலைவர்கள் எச்சரிக்கின்றனர்.
சாத்தானின் பிரதிநிதியாகக் கருதப்படும் 'ஆன்டிகிரைஸ்ட் ஏஐ'-ஐப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி, கடவுளுக்குப் பதிலாகத் தன்னை வழிபட வைக்கக்கூடும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இறுதியில், இயேசுவால் 'ஆண்டிகிறிஸ்ட்' (கடவுளுக்கு எதிரான சக்தி) தோற்கடிக்கப்படுவார் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், இந்தப் போராட்டம் நாம் அறிந்திருக்கும் உலகத்தின் முடிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
இன்று, வேலை, படிப்பு முதல் நட்பு மற்றும் துணையாக இருப்பது வரை பல்வேறு தேவைகளுக்காக லட்சக்கணக்கான மக்கள் ஏஐ பயன்படுத்துகின்றனர்.
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்தத் தொழில்நுட்பங்கள், உலகம் வேகமாக மாறிவருவதைக் காட்டுகின்றன. இதனுடன் எதிர்காலம் குறித்த கவலையும் அதிகரிக்கிறது.
ஆனால், பைப்பிளில் கூறப்படும் இறுதி காலம் குறித்து மக்கள் கணிப்பது இது முதல் முறையல்ல.
பனிப்போர் மற்றும் பெரும் பொருளாதார மந்தநிலை காலகட்டங்களிலும் இதேபோன்ற கவலை அலைகள் நிலவியதாக சில கிறிஸ்தவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



