இஸ்லாத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் செயல்: மலேசிய சுல்தான்கள் கவலை

முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சலவை இயந்திரத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது
படக்குறிப்பு, முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சலவை இயந்திரத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது
பிரசுரிக்கப்பட்டது

நாட்டில் இஸ்லாத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் செயல்கள் நடப்பது குறித்து மலேசியாவில் உள்ள ஒன்பது அரச சுல்தான்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிறித்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் இந்து சிறுபான்மையினர் மீது சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவது பற்றிய அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில் மலேசியாவிலுள்ள தனி மாகாணங்களுக்கு பெயரளவுக்கு தலைமை வகிக்கும் இந்த ஆட்சியாளர்கள் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்துக்காக அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் இரண்டு மாகாணங்களிலுள்ள பொது சலவை இயந்திர சேவை நிறுவனங்கள் முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளர்களை தடை செய்தன.

அவர்களது செயல்களுக்கு இந்த சுல்தான்கள் கண்டனம் தெரிவித்த பிறகு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்க ஒப்புக்கொண்டனர்.

இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் மற்றவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என ஆட்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். (மலேசியாவில் 60%க்கும் அதிகமானோர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :