காணொளி: எப்ஸ்டீன் மீது கொலை முயற்சி நடந்ததா? உடற்கூராய்வு அறிக்கை கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: எப்ஸ்டீன் மீது கொலை முயற்சி நடந்ததா? உடற்கூராய்வு அறிக்கை கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

எச்சரிக்கை: இந்த உள்ளடக்கம் சங்கடம் தரலாம்

எப்ஸ்டீன் ஃபைல்ஸ் வெளியானது முதலே பலருக்கும் பல கேள்விகள் எழுகிறது. அதில் ஒன்றுதான் 'எப்ஸ்டீன் எப்படி உயிரிழந்தார்?' என்ற கேள்வி. தற்போது அதற்கான பதிலை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

ஜெஃப்ரி எப்ஸ்டீனின் உடற்கூராய்வு அறிக்கை, அவர் உயிரிழந்ததும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.

அமெரிக்க சிறையில் எப்ஸ்டீன் எவ்வாறு உயிரிழந்தார்? இந்த உடற்கூராய்வு அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது? இந்த காணொளியில் பார்க்கலாம்.

23 பக்க அறிக்கையில் என்ன உள்ளது?

எப்ஸ்டீன் கடந்த 2019, ஆகஸ்ட் 10 அன்று சிறையில் இறந்து கிடந்தார். இவரின் மரணம் தற்கொலை என அறிவிக்கப்பட்டது.

எப்ஸ்டீன் சிறையில் இருந்தபோது நிகழ்ந்த மரணம் குறித்த எஃப்பிஐ விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியாக 20 படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனுடன் பிரேதப் பரிசோதனை மற்றும் சிறையின் உள் ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

23 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் "ரகசியமற்றது" என்ற முத்திரையிடப்பட்டுள்ளது.

பிபிசி வெரிஃபையால் சரிபார்க்கப்பட்ட இந்த ஆவணங்களில், எப்ஸ்டீனின் கழுத்து மற்றும் அதில் உள்ள காயங்களின் புகைப்படங்கள் உள்ளன.

மேலும், இதில் எப்ஸ்டீனின் பிரேதப் பரிசோதனை விவரங்கள் மற்றும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாட்களில் அவரது மனநலம் குறித்த உளவியல் அறிக்கையும் இடம்பெற்றுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு