காணொளி: 100 மீ. ஓட்டத்தில் சாதனை - இந்தியாவின் அதிவேக வீரரானார் குரிந்தர்வீர் சிங்
காணொளி: 100 மீ. ஓட்டத்தில் சாதனை - இந்தியாவின் அதிவேக வீரரானார் குரிந்தர்வீர் சிங்
பிரசுரிக்கப்பட்டது
குரிந்தர்வீர் சிங் 100 மீட்டர் ஓட்டத்தை 10.09 வினாடிகளில் நிறைவு செய்து தேசிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அதிவேக வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா தடகள மைதானத்தில் சனிக்கிழமையன்று குரிந்தர்வீர் சிங் இந்த சாதனையை படைத்தார்.
சாதனைக்குப் பிறகு குரிந்தர்வீர் சிங், "பணி இன்னும் முடியவில்லை, பொறுங்கள், நான் இன்னும் நின்றுகொண்டிருக்கிறேன்" என்று கையால் எழுதப்பட்டிருந்த செய்தியைக் காட்டினார்.
இதற்கு முன்னதாக அனிமேஷ் குஜூர் 10.15 வினாடிகளில் 100 மீட்டர் ஓடியது தேசிய சாதனையாக இருந்தது.
100 மீட்டரை 9.58 வினாடிகளில் ஓடி ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



