காணொளி: 'எல்லோரும் முகமதுதான்' - மத்திய கிழக்கு பற்றி டிரம்ப் சொன்னவை

காணொளிக் குறிப்பு, காணொளி: “எல்லோரும் முகமதுதான்” மத்திய கிழக்கு பற்றி டிரம்ப் சொன்னவை
காணொளி: 'எல்லோரும் முகமதுதான்' - மத்திய கிழக்கு பற்றி டிரம்ப் சொன்னவை
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், இரான் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசிக்கொண்டிருந்தார். இரானின் தற்போதைய பதற்றமான சூழலை விமர்சித்துப் பேசிய டொனால்ட் டிரம்ப், "உலகிலேயே யாரும் அதிபராக விரும்பாத ஒரே நாடு இரான் மட்டும்தான்" என்று குறிப்பிட்டார். தொடர்ந்து கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து, கற்பனையாகப் பலரிடம் கேள்வி எழுப்புவது போல பாவனை செய்த அவர், யாராவது இரானின் அதிபராக விரும்புகிறீர்களா? முகமது, நீங்கள் அதிபராக விரும்புகிறீர்களா? " என்று நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பினார். மத்திய கிழக்கு நாடுகளில் இந்தப் பெயர் எவ்வளவு பிரபலமானது என்பதை விளக்கும் விதமாகத் தொடர்ந்து பேசிய டிரம்ப், "மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த ஒருவரின் பெயர் உங்களுக்குத் தெரியவில்லை அல்லது சந்தேகம் இருந்தால், நேரடியாக 'முகம்மது' என்று கூப்பிடுங்கள். அது சரியாக இருப்பதற்கு 65% வாய்ப்புகள் உள்ளன. 'ஹலோ முகம்மது' என்று நான் பல வருடங்களாகக் கூறி வருகிறேன், அது ஒருபோதும் தவறானதில்லை" என்று கூறினார்.

அவரது இந்த கருத்து, இஸ்லாமிய சமூகத்தில் பரவலாக வைக்கப்படும் ஒரு புனிதமான பெயரைக் கேலி செய்யும் விதமாக இருப்பதாக மனித உரிமை அமைப்புகளும், முஸ்லிம் கூட்டமைப்புகளும் விமர்சித்துள்ளன

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு