காணொளி: கடலில் சூறாவளிக் காற்றிலிருந்து தப்பி கரை சேர்ந்த மீனவர்கள்
காணொளி: கடலில் சூறாவளிக் காற்றிலிருந்து தப்பி கரை சேர்ந்த மீனவர்கள்
பிரசுரிக்கப்பட்டது
கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட சூறாவளிக்காற்றில் படகுடன் மீனவர்கள் சிக்கிக்கொண்ட காட்சி இது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது கடலின் ஒரு பகுதியில் திடீரென சூறாவளிக் காற்று வீசியது. கடுமையான காற்று மற்றும் ராட்சத அலைகளால் விசைப்படகு தடுமாறியது.
இந்த காட்சிகள், அந்த படகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
தகவல் அறிந்த மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர் மீனவர்கள் கரை சேரும்வரை தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வந்ததாகத் தெரிவித்துள்ளனர். படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் பத்திரமாக கரை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



