காணொளி: ஆற்றில் கூட்டமாக தென்பட்ட 11 முதலைகள்
காணொளி: ஆற்றில் கூட்டமாக தென்பட்ட 11 முதலைகள்
பிரசுரிக்கப்பட்டது
குஜராத் மாநிலம் வதோதராவின் தாதர் ஆற்றங்கரை அருகே 11 முதலைகள் கூட்டமாக இருந்ததை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால், ஆற்றங்கரையிலிருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கு வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கிடையில், பய்லி பகுதியில் உள்ள 'கேலக்ஸி பங்களாஸ்' பகுதிக்குள் நுழைந்த 9 அடி நீளமுள்ள முதலை ஒன்று மீட்கப்பட்டதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.
பருவமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருவதால் முதலைகள் ஆறுகளிலிருந்து வெளியேறி ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்குள் வரத் தொடங்கியுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



