காணொளி: காரின் மீது மோதி சுழன்ற பேருந்து
காணொளி: காரின் மீது மோதி சுழன்ற பேருந்து
பிரசுரிக்கப்பட்டது
கேரள மாநிலம் கண்ணூர் மம்பரத்தில் பேருந்து ஒன்று சாலையில் சுழன்று விபத்துக்குள்ளானது. மம்பரம் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியே வந்த காரின் மீது மோதியது. இதையடுத்து பேருந்து சாலையில் சுழன்றது. பேருந்து மோதியதால் கார் பின்நோக்கி சென்று சாலையோரம் நின்றிருந்த மற்றொரு காரில் மோதி நின்றது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதுமில்லை.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



