காணொளி: ரேஷன் கடையை உடைத்து அரிசி சாப்பிட்ட யானை
காணொளி: ரேஷன் கடையை உடைத்து அரிசி சாப்பிட்ட யானை
பிரசுரிக்கப்பட்டது
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை யானை வலம் வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை அன்று அதிகாலையில் காட்டு யானை ரேஷன் கடையின் கதவை உடைத்து அரிசியை சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்த மூட்டைகளை தூக்கிச் சென்றுள்ளது. யானை ரேஷன் கடையின் கதவை உடைக்கும் வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வெளியானது.
இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஊருக்குள் உலா வரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



