தொகுதி மறுவரையறை: தவெக கொண்டு வந்த தனித் தீர்மானம் யாருக்கு பலனளிக்கும்?

காணொளிக் குறிப்பு,
தொகுதி மறுவரையறை: தவெக கொண்டு வந்த தனித் தீர்மானம் யாருக்கு பலனளிக்கும்?
பிரசுரிக்கப்பட்டது

தொகுதி மறுவரையறை மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாக மாறியுள்ளது.

மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற அச்சம் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை என்றால் என்ன? முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தில் கூறப்பட்டது என்ன? இந்த தீர்மானத்தை ஆதரித்தது யார்? எதிர்த்து யார்? என்பது குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.