காணொளி: இரான் கடற்கொள்ளையர்கள் சுட்டதில் சீர்காழியை சேர்ந்த மீனவர் பலி
செளதி அரேபியாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்த சீர்காழியை சேர்ந்த மீனவர் இரானிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடுவாய் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் மூன்று மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தொடுவாய் சுனாமி நகர் பகுதியை சேர்ந்த மீனவர் மாவீரன். இவரும் மற்ற மூன்று மீனவர்களும் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இரானிய கடற்கொள்ளையர்கள் மாவீரன் உள்ளிட்டோர் சென்ற படகில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது இரானிய கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் அதில் பலத்த காயம் அடைந்த மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மீனவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த நிலையில் மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இறந்த மீனவர் மாவீரனுக்கு நீலவேணி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



