காணொளி: முகவரியை பகிர்ந்ததால் வந்த சிக்கல் - வீரமணி மனைவி சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: முகவரியை பகிர்ந்ததால் வந்த சிக்கல் - வீரமணி மனைவி சொல்வது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் வீரமணி, சமூக வலைதள பக்கங்களில் தனது வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பகிர்ந்ததால் கடந்த சில நாட்களாக இவரின் வீட்டிற்கு ஆன்லைன் டெலிவரி பார்சல்கள் குவிந்து வருகின்றன. இதனால் வீட்டையே காலி செய்யும் நிலைக்கு இவர் தள்ளப்பட்டுள்ளார்.

பார்சல்கள் வருவதால் எதற்காக வீட்டை காலி செய்ய வேண்டும் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இவருக்கு வரும் ஆர்டர்கள் அனைத்தும் , 'கேஷ் ஆன் டெலிவரி' ஆர்டர்கள்.

எப்போதும் யாராவது டெலிவரிக்காக வீட்டுக் கதவை தட்டுவதாக வீரமணியின் மனைவி சுமங்கலி கூறுகிறார்.

வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு