காணொளி: விஜயவாடாவில் தீப்பிடித்து எரிந்த மின்சார கார் - 4 பேர் பலி

காணொளிக் குறிப்பு,
காணொளி: விஜயவாடாவில் தீப்பிடித்து எரிந்த மின்சார கார் - 4 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில், மின்சார கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. விஜயவாடா மேற்கு பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த மின்சாரக் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கோதாபேட் காவல்துறையினர் கூறினர்.

இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததாகவும், அதில் பயணித்த நான்கு பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு