காணொளி: முதல் வகுப்பு ஏசி கூப்பேவை அலங்கரித்த விவகாரம் - ரயில்வே கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, ரயிலின் முதல் வகுப்பு ஏசி கூப்பேவில் பூக்கள் பலூன்கள் கொண்டு அலங்காரம்.
காணொளி: முதல் வகுப்பு ஏசி கூப்பேவை அலங்கரித்த விவகாரம் - ரயில்வே கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ரயிலின் முதல் வகுப்பு ஏசி கூப்பே ஒன்று பூக்கள், பலூன் ஆகியவை கொண்டு அலங்கரிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

இது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த தெற்கு மத்திய ரயில்வே, ஜூலை 6 அன்று நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த தம்பதியினர், அந்த கூப்பே-ஐ அலங்கரிக்க ஏற்பாடு செய்தனர்.

மகாராஷ்டிராவின் ஜால்னா ரயில் நிலையத்தில், அலங்காரம் செய்பவர்கள் ரயிலுக்குள் நுழைந்தது அனுமதியற்ற ஒன்றாகும்; இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஊழியர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது .

மேலும். பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தது மற்றும் அத்துமீறி நுழைந்தது ஆகிய குற்றங்களுக்காக, ரயில்வே சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அந்த அலங்காரம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு