காணொளி: இடிக்கும் பணியின்போது சரிந்து விழுந்த தொட்டி
காணொளி: இடிக்கும் பணியின்போது சரிந்து விழுந்த தொட்டி
பிரசுரிக்கப்பட்டது
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில், நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்த நிலையில் இருந்த குடிநீர் தொட்டியை, இயந்திரங்களின் உதவியுடன் அகற்றும் பணி நடைபெற்றது.
அப்போது எதிர்பாராத விதமாக அந்தத் தொட்டி திடீரென சரிந்து விழுந்தது. தொட்டியின் இடிபாடுகள் அருகில் இருந்த குடியிருப்புப் பகுதியை நோக்கி விழுந்தன. இதில் ஒரு வீட்டின் ஒரு பகுதியும், கிராம நிர்வாக அலுவலகத்தின் சுவர் மற்றும் நுழைவாயில் கதவும் சேதமடைந்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



