காணொளி: விஜய் வரும் முன்பே திடலுக்குள் முண்டியடித்துச் செல்லும் மக்கள்
காணொளி: விஜய் வரும் முன்பே திடலுக்குள் முண்டியடித்துச் செல்லும் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக முதலமைச்சர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் இன்று மாலை சுமார் 3 மணியளவில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுக்கூட்டத்தில் QR குறியீடு கொண்ட அனுமதிச்சீட்டு பெற்ற 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு செல்லும் காட்சிகளை காண முடிகிறது.
பொதுகூட்டம் நடைபெறும் திடல் நிரம்பியுதாகவும் பொதுமக்கள் வெயிலில் நிற்க வேண்டாம் எனவும் போலீசார் லி பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



