காணொளி: நாக்பூரில் 36 டன் தாய்லாந்து 'மங்கூர்' மீன்கள் அழிக்கப்பட்டது ஏன்?
சுமார் 36 டன் எடையுள்ள தாய்லாந்து 'மங்கூர்' மீன்கள் அழிக்கப்பட்டன. தாய்லாந்து மங்கூர் மீன்களின் சட்டவிரோத வளர்ப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மீன்வளத்துறை நாக்பூரில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
25 மீனவர்களைக் கொண்ட குழுவினர் 11 ஏரிகளில் சோதனை நடத்திய பின் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 36 டன்னுக்கும் அதிகமான தாய்லாந்து மங்கூர் மீன்கள் கண்டறியப்பட்டு, அவை சந்தைக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் குழிகளில் புதைத்து அழிக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட பண்ணை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மொத்தம் 51 டன் தாய்லாந்து மங்கூர் மீன்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த மீன்கள் சந்தையில் ரகசியமாக விற்பனை செய்யப்பட்டு வந்ததாகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



