அபிஜித் தீப்கேவை விடுவித்த டெல்லி நீதிமன்றம்

காணொளிக் குறிப்பு, சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கேவை விடுவித்த டெல்லி நீதிமன்றம்
அபிஜித் தீப்கேவை விடுவித்த டெல்லி நீதிமன்றம்
பிரசுரிக்கப்பட்டது

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே சனிக்கிழமை விடுவிக்கப்பட்டதாக, அக்கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை, தேசியக்கொடி பேரணிக்கு அபிஜித் தீப்கே அழைப்பு விடுத்திருந்த நிலையில் பேரணி தொடங்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

சனிக்கிழமை மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சில நிபந்தனைகளுடன் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக 'பார் அண்ட் பெஞ்ச்' செய்தி வெளியிட்டுள்ளது.

'லைவ் லா' செய்தியின்படி, பிணைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அவர் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, ஓராண்டுக்குப் பொது அமைதியைப் பேண வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போராவும் சனிக்கிழமை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு , பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

CJP-யின் மற்ற இரண்டு முக்கியத் தலைவர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

அனுமதியின்றி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்ததாகக் கூறி, அவர்கள் ஐந்து நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு