'பாட்ஷா... பாட்ஷா' பின்னணி இசை உருவான கதை - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேட்டி

காணொளிக் குறிப்பு, பாட்ஷா பின்னணி இசை உருவான கதை - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
'பாட்ஷா... பாட்ஷா' பின்னணி இசை உருவான கதை - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தேவாவின் உடலுக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேவா போட்ட பாட்ஷா...பாட்ஷா.. பிஜிஎம் இசையை எப்போதும் மறக்க முடியாது. படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு ஸ்பாட்டில் அமைத்த இசை அது. நான் ஐடியாவை கொடுத்ததும் நடந்துவரும் புட் ஸ்டெப்பை தீமாக மாற்றினார். இன்றைக்கும் புட் ஸ்டெப்ஸை கேட்கும் போது தேவா நியாபகம்தான் வரும். பாட்ஷா படத்தின் வெற்றிக்கு தேவாவுக்கு முக்கியப் பங்குள்ளது." என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "சமீபத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு காரில் பயணிக்கும் போது என் டிரைவர் பெண் புறா பாட்டை ஒலிக்கவிட்டார். உடனே தேவாவுக்கு கால் செய்து, "சார் பெண் புறா ஓடுது கேட்கிறீங்களா?' என்றேன். பிரமாதமான பாட்டு அது" என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு