காணொளி: திண்பண்டங்களில் எதிரொலிக்கும் இரான் போரின் விளைவுகள்

காணொளிக் குறிப்பு, திண்பண்டங்களில் எதிரொலிக்கும் இரான் மீதான போரின் விளைவுகள்
காணொளி: திண்பண்டங்களில் எதிரொலிக்கும் இரான் போரின் விளைவுகள்
பிரசுரிக்கப்பட்டது

இரான் மீதான போரின் விளைவுகள் திண்பண்டங்களிலும் எதிரொலித்துள்ளன.

ஹோர்மூஸ் நீரிணை பிரச்னையால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், அச்சிடும் மையின் விலை உயர்ந்துள்ளது.

அதிலும் வண்ண மையின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக 'Calbee' திண்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனம், அதன் சிப்ஸ் பாக்கெட்களை கருப்பு-வெள்ளை நிறத்தில் மாற்றியுள்ளது.

ஜப்பானியக் கடைகளில் மே 25 ஆம் தேதி முதல் புதிய பாக்கெட்களில் இந்த சிப்ஸ் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சந்தைப்படுத்தல் உத்தியாக கூட இருக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு