காணொளி: குஜராத்தில் இந்த ஒட்டுமொத்த கிராமமும் கொசு வலைக்குள் தஞ்சம் புகுவது ஏன்?

காணொளி: குஜராத்தில் இந்த ஒட்டுமொத்த கிராமமும் கொசு வலைக்குள் தஞ்சம் புகுவது ஏன்?

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ள வேஜா கிராமம், தற்போது மிகவும் விசித்திரமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. அங்கு கொசுத் தொல்லை மிக அதிகமாகப் பெருகிவிட்டதால், மக்களும் விலங்குகளும் கொசு வலைகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கொசு தொல்லை தாங்க முடியாமல், கிராமத்திற்கு வரும் விருந்தினர்கள்கூட மாலையில் கிளம்பிவிடுவதாக கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இந்தப் பிரச்னையால், கிராம இளைஞர்களால் திருமணம்கூடச் செய்துகொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது.

கொசு பிரச்னையால் மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. அசுத்தமான நீரும், ஆகாயத் தாமரைகளுமே இந்தக் கொசுத் தொல்லைக்கான முக்கியக் காரணம் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்தப் பிரச்னை குறித்து நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும், இதுவரை எவ்வித தீர்வும் காணப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு