காணொளி: இரானுடன் பேச்சு நிறைவு - பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்

காணொளி: இரானுடன் பேச்சு நிறைவு - பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்

அமெரிக்கா - இரான் இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்த தீர்வும் எட்டப்படாமல் முடிந்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு ராவல்பிண்டியில் உள்ள நுர் கான் விமானப்படை தளத்திற்குச் சென்ற ஜே.டி.வான்ஸ் அங்கிருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார். அவரை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனிர், வெளியுறவு அமைச்சர் இஷக் தர் மற்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு