You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இந்த கிராம மக்கள் மணமகனே இல்லாமல் திருமண சடங்குகளை முடிப்பது ஏன்?
குஜராத்தின் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் உள்ள அம்பாலா கிராமத்தில், திருமணம் முழுவதுமே மணமகன் இல்லாமலே நடைபெறுகிறது. அதற்குப் பதிலாக, மணமகனின் சகோதரிதான் திருமண ஊர்வலத்தை நடத்திச் சென்று, திருமண சடங்குகளைச் செய்கிறார். இந்தப் பழக்கம் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
அம்பாலா கிராமத்தைச் சேர்ந்த கிஷன்சிங் ரத்வா, சுர்சிங் ரத்வா என்ற இரண்டு சகோதரர்களும் இதே வழக்கத்தின்படி திருமணம் செய்துகொண்டனர். கிஷன் மற்றும் சுர்சிங்கின் சகோதரி, தனது சகோதரர்கள் சார்பாக திருமண ஊர்வலத்தை நடத்தி வைத்தார். திருமணச் சடங்குகள் முடிந்த பிறகு, அவர் அம்பாலா கிராமத்திற்குத் திருமினார். பின்னர் அங்கு நடந்த ஒரு விழாவில், புதுமணத் தம்பதி குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள்.
கிராம மக்களின் கூற்றுப்படி, கடந்த காலத்தில் இரண்டு இளைஞர்கள் திருமண ஊர்வலம் எடுத்துச் சென்று இந்த மரபை மீற முயன்றனர். இருப்பினும், அவர்களுடைய திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. அன்று முதல், கிராம மக்கள் இந்த மரபை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு