காணொளி: மோதி அரசுக்கு முன் உள்ள 10 சவால்கள் என்ன?
குஜராத் முதலமைச்சராகத் தொடங்கிய அரசியல் பயணம், இந்தியாவின் பிரதமராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியில் நீடிக்கும் நிலை வரை என நரேந்திர மோதி அரசுப் பதவிகளில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்தியாவில் ஜவஹர்லால் நேரு, மோதி ஆகியோரை தவிர்த்து யாரும் தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமர் பதவியை வகித்தது இல்லை. மோதியின் இந்த 25 ஆண்டு கால பயணத்தை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். மறுபுறம் விமர்சகர்கள் கடந்த சில ஆண்டுகளில் மோதியின் பொது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாகக் கவனித்து மதிப்பீடு செய்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை முதல் பொருளாதாரம், இளைஞர்களின் அதிருப்தி, பங்குச் சந்தை சரிவு, சர்வதேச உறவுகள் வரை... மோதி அரசுக்கு முன்னால் இருக்கும் முக்கியமான 10 சவால்கள் என்ன?
இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



