காணொளி: இடிபாடுகளுக்கு நடுவே கால்பந்து போட்டியை பார்க்கும் காஸா ரசிகர்கள்
காணொளி: இடிபாடுகளுக்கு நடுவே கால்பந்து போட்டியை பார்க்கும் காஸா ரசிகர்கள்
பிரசுரிக்கப்பட்டது
காஸாவின் நுசைரத் முகாமில், கட்டட இடிபாடுகளுக்கு நடுவே நூற்றுக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் உலகக் கோப்பை போட்டியைக் காண திரண்டனர்.
அர்ஜென்டினா மற்றும் எகிப்து அணிகள் மோதிய போட்டியை ரசிகர்கள் பெரிய திரையில் கண்டு ரசித்தனர்.
அவர்களில் பலர் எகிப்து தேசியக் கொடிகளை ஏந்தியிருந்தனர்.
காஸா பகுதியை ஒட்டியுள்ள நாடான எகிப்து, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது.
போட்டியில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



