டெல்லியில் அகில இந்திய மாணவர் சங்க பெண் தலைவர் தடுத்து வைப்பா?
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில், ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் இந்தியா கேட் முதல் ஜந்தர் மந்தர் வரை பேரணி ஒன்றை நடத்தினர். எனினும், ஜந்தர் மந்தருக்குச் செல்லும் சாலைகளை டெல்லி காவல்துறை தடுப்புகள் மூலம் அடைத்ததுடன், அப்பகுதியில் பெருமளவிலான பாதுகாப்பு படையினரையும் குவித்தது.
இடதுசாரி மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கம், தங்கள் தலைவர் நேஹா போரா டெல்லி காவல்துறையினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத வாகனத்தில் டெல்லி காவல்துறை நேஹா போராவை அழைத்து சென்றதாகவும், அதில் ஒரு பெண் காவலர் கூட இல்லை என்றும் அந்த அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. பின்னர் சற்று நேரம் கழித்து வெளியிட்ட பதிவில் தற்போது நேஹா போரா விடுவிக்கப்பட்டதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



