You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மணிப்பூரில் மீண்டும் பதற்றம், தற்போதைய நிலவரம் என்ன?
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள ட்ராங் லாவ்பி கிராமத்தில், ஏப்ரல் 6 இரவு மற்றும் 7ஆம் தேதி அதிகாலை நேரத்தில் நடைபெற்ற வெடிப்பில் குழந்தைகள் இருவர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், இம்பால் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இணையச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.
பிபிசி செய்தியாளர் ராகவேந்திர ராவ் மற்றும் வீடியோ செய்தியாளர் தேவாஷிஷ் குமார் ஆகியோர் களத்திற்கே நேரில் சென்று ஆய்வு செய்து வழங்கும் சிறப்பு கள அறிக்கையை பார்க்கலாம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு