You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மனஅழுத்தத்தால் முகப்பரு ஏற்படுமா?
மன அழுத்தம், அடிப்படை உணர்வுகளில் ஈடுபடும் மூளையின் ஒரு பகுதியான 'அமிக்டலாவை' தூண்டுகிறது.
இது ஹைபோதாலமஸ் எனப்படும் ஒரு கட்டுப்பாட்டு மையத்திற்கு சமிக்ஞை அனுப்புகிறது. அது கார்டிசோல், அட்ரினலின் போன்ற பல்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய சுரப்பிகளைத் தூண்டுகிறது.
இவை ரத்த ஓட்டத்தின் ஊடாக, உங்கள் தோல் உட்பட, உடல் முழுவதும் பயணிக்கின்றன.
மூளையின் மன அழுத்த எதிர்வினையில் இருந்து ஹார்மோன்களை பெறுவதோடு கூடவே, தோலும் தனக்கே உரிய மன அழுத்த வேதிப்பொருட்களை வெளியிடுகிறது.
மன அழுத்த வேதிப்பொருட்கள் வீக்கத்தை அதிகரிக்கவும், தோலின் வெளிப்புறத் தடையை உருவாக்கும் கொழுப்பு லிப்பிட்களைக் குறைக்கவும் கூடும்.
மன அழுத்தம், தோலிலுள்ள செல்களையும் தூண்டி, உங்களுக்கு அரிப்பு உணர்வை ஏற்படுத்தும் ஹிஸ்டமின் போன்ற வேதிப்பொருட்களை வெளியிடச் செய்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு