காணொளி: சாத்தான்குளம் வழக்கின் பின்னணி என்ன?

காணொளி: சாத்தான்குளம் வழக்கின் பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020-ஆம் ஆண்டில் தந்தையும் மகனும் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு நிகழ்ந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் காவல் மரண வழக்கு தமிழ்நாட்டை உலுக்கியது. இந்த வழக்கில் 10 காவலர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் வழக்கில் முதல் நபராக குற்றம்சாட்டப்பட்டார். உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. இதில் பால்துரை என்பவர் 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துவிட்ட நிலையில், தற்போது 9 பேருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது? இந்த வழக்கின் பின்னணி என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு